விமலின் பிணைக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை – அஜித்

279 0
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு பிணை வழங்கப்பட்டமைக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியதன் மூலம் இலங்கை அரசுக்கு 9 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விமல் வீரசன்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அவருக்கு அண்மையில் பிணை வழங்கப்பட்டது.
கொள்ளையடித்தாலும் ஒருவருக்கு 3 மாதங்களின் பின்னர் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணை வழங்கப்படும்.
எனவே விமல் வீரவன்ச பிணை வழங்கியதன் மூலம் நிரபராதியாக மாட்டார்.
அடுத்த வழக்கு விசாரணை வரை தப்பிச்செல்ல முடியாது என்ற நிபந்தனையின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விமல் வீரவன்ச மீதான குற்றசாட்டினை விரைவில் விசாரித்து நிறைவு செய்யுமாறு, பிரதமர் ஆலோசனை வழங்கியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் விமல் வீரவன்ச, ஐக்கிய தேசிய கட்சியுடன் நட்புறவை பேணுவதாக கூறுகின்றனர்.
எனினும் தாம் ஒரு விடயத்தை கூற விரும்புவதாக தெரிவித்த அஜித் பீ பெரேரா, விமல் வீரவன்ச போன்ற திருடர்களை ஐக்கிய தேசிய கட்சியில் இணைத்து கொள்ளும் அளவிற்கு ஐக்கிய தேசிய கட்சி வங்குரோத்து நிலையை அடையவில்லை என குறிப்பிட்டார்.