நடிகை தமிதா அபேரத்ன தம்பதியினர் தொடர்பான வழக்கு விசாரணை மே 16 இல்!

50 0

பிரபல நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர்  ஆகியோர்  கைது செய்யப்படுவதை தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்கக் கோரிய மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நேற்று (02) நிராகரிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்தமை தொடர்பான வழக்கு விசாரணையின்போதே குறித்த மனு நிராகரிக்கப்பட்டுளளது.

இந்த மனு மீதான விசாரணை மீண்டும் மே 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.