பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு உருவாக்கப்பட்ட விசேட 20 குழுக்களினால் நாடளாவிய ரீதியில் நேற்று (2) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் வடபிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கனேமுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 54 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரத்தொழுகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹோரம்பெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கம்பஹா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் பாணந்துறை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 45 மற்றும் 71 வயதுடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக குற்றக் கும்பலைச் சேர்ந்த 252 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.