உயர் தொழில்நுட்ப கல்வி டிப்ளோமா முடித்த 500 பேரை ஆங்கில ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த ஆட்சேர்ப்பு செய்யப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு அவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.