ஐக்கிய அரபு அமீரகத்தில் பல வருடங்களுக்குப் பின்னர் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாய்ந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்த இலங்கை யுவதியான ஜயமினி சதமாலி விஜேசிங்கவின் உடல் இன்று (03) இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது.
களுத்துறை, மத்துகம பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய ஜயமினி சதமாலி விஜேசிங்க, என்ற இந்த யுவதி மத்துகம சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர மத்திய மகா வித்தியாலயத்தில் கணிதப் பிரிவில் உயர்தரம் கற்ற மாணவியாவார்.
கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து எதிரே உள்ள கடைக்கு செல்வதற்காக அவர் வந்துள்ளார்.
இதன்போது பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த தொடர் மழையால் ஷார்ஜாவும் வெள்ளப் பேரழிவாக மாறியது.
அவர் பணிபுரிந்த ஷார்ஜாவில், பூமிக்கு அடியில் மின் வயரிங் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வெள்ள சூழ்நிலையால் இந்த மின் அமைப்பில் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனை அறியாத ஜெயமினி சதமாலி விஜேசிங்கவும் இந்த வெள்ளத்தில் வீழந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.