பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு அருகில் கழுத்தறுக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த இந்திக்க லக்மான் என்ற 38 வயதுடையவராவார்.
இவர் நேற்று (2) இரவு 9.15 மணியளவில் உயிரிழந்தவர் தனது முச்சக்கரவண்டியில் கோழி இறைச்சி கொள்வனவு செய்வதற்காகக் குறித்த தேவாலயத்துக்கு அருகில் உள்ள கடையொன்றிற்குச் சென்றிருந்த போதே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.