திருகோணமலையில் சுருக்கு வலை பயன்படுத்தி, மீன்பிடிக்க தடைசெய்யப்பட்ட பிரதேசமான நோர்வே தீவுக்கருகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 10 மீனவர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று மாலை 3.00 மணியளவில் இந்த மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்கள் பயன்படுத்திய சுருக்கு வலையையும், ஒரு படகையும் மற்றும் அவர்கள் பிடித்த 300 கிலோவுக்கு அதிகமான மீன்களையும் திருகோணமலை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் மாலை 5.00 மணியளவில் கடற்படையினர் ஒப்படைத்தனர்.