ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் தரித்து நிற்கும் கப்பல் ஒ்னறில் வாகனங்களை ஏற்ற முயற்சித்தபோது கார் ஒன்று கடலில் வீழ்ந்ததில் சாரதி காயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்றுமதி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பல்வேறு வாகனங்களை இன்று (03) அதிகாலை 2.30 மணியளவில் சர்வதேச துறைமுகத்தில் கப்பலொன்றிற்கு ஏற்ற முயற்சித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாரதியின் நிலைமை பாரதூரமாக இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் துறைமுக அதிகாரிகள் எந்தவித கருத்துக்களும் தெரிவிக்கவில்லை.