மாளிகாவத்தையில் பாலத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி , தோட்டாக்கள்!

60 0

கொழும்பு மாளிகாவத்தையின் மிலானிய வீட்டுத்தொகுதிக்கு அருகில் உள்ள பாலமொன்றிற்கு கீழ் வைத்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி ஒன்றும் 21 தோட்டாக்களுமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவது தொடர்பிலும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கையின் போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.