பேக்கரி உணவு பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

54 0

எரிவாயு விலை குறைவடைந்தாலும் பேக்கரி உணவு பொருட்களின் விலை குறைவடையாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் எரிபொருள் விலைகள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்தபோதும் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை. ஆனால் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்ட போது பேக்கரி  உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டது என பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.

எனவே, கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால்  மாத்திரமே பேக்கரி  உணவு பொருட்களின் விலையைக் குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.