சூரிய உதயத்தைக் காண்பதற்காக சீகிரியாவுக்கு நடந்து சென்ற கனேடிய சுற்றுலாப் பயணிகளில் ஒருவரை இன்று (2) அதிகாலை காட்டு யானை தாக்கியுள்ளது.
இந்த தாக்குதலில் பெண் படுகாயமடைந்துள்ளதுடன், அவர் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீகிரிய சுற்றுலா பயணச்சீட்டு அலுவலகத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் கணவரின் அலறல் சத்தம் கேட்ட சுற்றுலா வழிகாட்டி ஒருவர் உடனடியாக தனது மோட்டார் சைக்கிளில் அந்த இடத்துக்கு சென்று பார்த்தபோது, குறித்த பெண் காட்டு யானையால் தாக்கப்பட்ட நிலையில் அங்கு காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சுற்றுலா வழிகாட்டி தனது மோட்டார் சைக்கிளின் ஒலியை எழுப்பி பிரதான மின் விளக்கை பயன்படுத்தி காட்டு யானையை விரட்டியுள்ளார்.