சதொசவில் 9 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு!

30 0

லங்கா சதொச விற்பனை நிலையங்களில் 9 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இந்த விலை குறைப்பு இன்று செவ்வாய்க்கிழமை (2) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கிலோ பெரிய வெங்காயம் 55 ரூபாவாலும், ஒரு கிலோ சின்ன வெங்காயம் 30 ரூபாவாலும், ஒரு கிலோ நிலக்கடலை 16 ரூபாவாலும், ஒரு கிலோ உருளைக் கிழங்கு 15 ரூபாவாலும், 400 கிராம் பால்மா 10 ரூபாவாலும்,  ஒரு கிலோ கோதுமை மா 8 ரூபாவாலும், ஒரு கிலோ பச்சரிசி 3 ரூபாவாலும்,  ஒரு கிலோ  சோயா மீட் 2 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஒரு கிலோ பெரிய வெங்காயம் 495 ரூபாவாகவும், ஒரு கிலோ சின்ன வெங்காயம் 290 ரூபாவாகவும், ஒரு கிலோ நிலக்கடலை 494 ரூபாவாகவும், ஒரு கிலோ உருளைக் கிழங்கு 195 ரூபாவாகவும், 400 கிராம் பால்மா 925 ரூபாவாகவும்,  ஒரு கிலோ கோதுமை மா 192 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சரிசி 192 ரூபாவாகவும்,  ஒரு கிலோ  சோயா மீட் 593 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளன.