பொலிஸ்மா அதிபருக்கு எதிரான மனுக்கள் இன்று பரிசீலனை!

48 0

தேஷ்பந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று (02) உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்படவுள்ளன.

இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.

பேராயர் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை, பேராசிரியர் சாவித்திரி குணசேகர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

சபாநாயகர், பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், சட்டமா அதிபர் உள்ளிட்ட அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட தேஷ்பந்து தென்னகோனின் நியமனத்திற்கு அரசியலமைப்பு சபை உத்தியோகபூர்வமாக ஒப்புதல் அளிக்கவில்லை என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவ்வாறான நிலையில், அவரை அந்தப் பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் முற்றிலும் சட்டத்துக்கு முரணானது என மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, உரிய நியமனத்தை செல்லாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுக்களில் கோரப்பட்டுள்ளது.