கலவானையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

50 0

கலவானை நகரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கார் பழுதுபார்க்கும் நிறுவனத்துக்கு  அருகில் இன்று (02) காலை  கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு  ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

கலவானை, கோனகலகந்த பகுதியைச் சேர்ந்த திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான  54 வயதுடைய  நபரே  இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் அவர்  ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக்  கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கலவானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.