வடக்கு கிழக்கில் அமைக்கப்படவிருந்த பொருத்து வீடுகள் திட்டத்தை கைவிட உத்தேசித்தால், அரசாங்கம், புதிய கேள்விப்பத்திர கோரலை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார் என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.ஏற்கனவே அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்மொழிந்திருந்த 65 ஆயிரம் பொருத்து வீடுகள் திட்டத்துக்கு பாரிய எதிர்ப்புகள் வெளிக்காப்பட்டப்பட்டு வருகின்றன
இதனையடுத்து அரசாங்கம் இந்த திட்டத்தை மீளப்பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்தநிலையில் புதிய கேள்விப்பத்திர கோரல் மேற்கொள்ளப்பட்டு குறைந்த செலவில் நிறைவான வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கோரிக்கை என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்
இதன்போது முன்னர் பரிந்துரைக்கப்பட்ட அதே நிதி ஒதுக்கீடுகளை அமைச்சர் சுவாமிநாதன் மீண்டும் பரிந்துரைக்ககூடாது.புதிய கேள்விப்பத்திரத்தின் கீழ் குறைந்த செலவிலான வீடுகளை அமைக்கும் கோரலை சமர்ப்பிக்க வேண்டும் என்று சுமந்திரன் கேட்டுள்ளார்.இந்த விடயத்தில் ஏன், இலங்கையின் உள்ளுர் வீடமைப்பு நிறுவனங்களை அரசாங்கம், கருத்திற்கொள்ளவில்லை என்று சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.