முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட குருணாகல் மாவட்டத்திற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு அமைப்பாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
மேலும் 7 தொகுதி அமைப்பாளர்களையும் ஜனாதிபதி நியமித்துள்ளார். குருணாகல் மாவட்ட தலைவராக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மே தினத்தை இலக்கு வைத்து இந்த நியமனங்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கட்டுகம்பளை தொகுதி அமைப்பாளர்- அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா
யாப்பஹூவ தொகுதி அமைப்பாளர் – ராஜாங்க அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க
தம்பதெனியா தொகுதி அமைப்பாளர் – சாந்த பண்டார
குளியாப்பிட்டிய தொகுதி அமைப்பாளர் – அதுல விஜேசிங்க
கல்கமுவ தொகுதி அமைப்பாளர் – தாராநாத் பஸ்நாயக்க
தொடங்கஸ்லந்த தொகுதி அமைப்பாளர் – நிமல் விஜேசிங்க
மாவத்தகமை தொகுதி அமைப்பாளர் – டப்ளியூ. உபுல் பிரியந்த
குருணாகல் மாவட்ட அமைப்பாளர்களாக உப்புலாங்கனி மாலகமுவ, நிலந்த சுப்புன் ராஜபக்ச, எஸ்.எம். சப்ராஸ், சரத் ரத்நாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.