ஈரானை சேர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது லண்டனில் கத்தி;க்குத்து

54 0

பூரியா ஜெராட்டி என்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் காலில் கத்தியால் குத்தப்பட்டார்.  நிகழ்ச்சி தொகுப்பாளரின் நிலைமை ஆபத்தானதாகயில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்து குறித்தும்இந்த தாக்குதல் குறித்தும் விசாரணைகைள முன்னெடுத்துள்ளதாக லண்டனின் மெட்ரோபொலிட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலிற்கு யார் காரணம் என்பதை கண்டறிந்து கைதுசெய்வதற்காக விசாரணைகள் இடம்பெறுகி;ன்றன என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் மற்றும் லண்டனில் வாழும் ஈரான் சமூகத்தினர் மத்தியில் இந்ததாக்குதல் காரணமாக எழக்கூடிய கரிசனைகளை தான் புரிந்துகொண்டுள்ளதாக ஈரான் இன்டநசனல் என்ற அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது கடந்த காலங்களில் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர் ஆனால் இவ்வாறான தாக்குதல் இடம்பெறுவது இதுவே முதல் தடவை என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும்இந்த தாக்குதலிற்கும் தங்களிற்கும் தொடர்பில்லை என ஈரான் தூதரக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஈரானிய அரசாங்கத்தின் எதிரிகள் என கருதப்படுபவர்களை பிரிட்டனில் கொல்வதற்கு அல்லது கடத்துவதற்கான பல சதிமுயற்சிகளை முறியடித்துள்ளதாக லண்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.