ஆடம்பர கைக்கடிகாரங்கள் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகளின் ஒரு பகுதியாக, பெரு ஜனாதிபதி தீனா பொலுவார்த்தேயின் இல்லத்தில் அந்நாட்டு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
ஜனாதிபதி பொலுவார்தே, உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் ஆடம்பர ரோலக்ஸ் கைக்கடிகாரம் அணிந்திருந்தமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
இக்கைடிகாரங்களை அவர் எவ்வாறு, எப்போது வாங்கினார் என கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில், வழக்குத் தொடுநர்களின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் அளித்ததையடுத்து நேற்று அதிகாலை ஜனாதிபதி தீனா பொலுவார்த்தேயின் இல்லத்தில் நேற்றுமுன்தினம் சோதனை நடத்தப்பட்டது.
பொலிஸார் உட்பட 40 அதிகாரிகள் இச்சோதனையில் பங்குபற்றினர். ஜனாதிபதி பொலுவார்த்தே அப்போது அவ்வீட்டில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆடம்பர கைக்கடிகாரத்தை எப்படி தீனா பொலுவாரத்தே (61) வாங்கினார் என முன்னர் கேட்கப்பட்டபோது தான் 18 வயதிலிருந்து உழைத்ததால் அதை வாங்க முடிந்ததாக அவர் பதிலளித்திருந்தார்.