கடவுச் சீட்டு வழக்கிலிருந்து விமல் வீரவன்ச விடுதலை!

44 0

குடிவரவு – குடியகல்வு சட்டத்தின் கீழ் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இன்று (01) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த விமல் வீரவன்ச, கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி செல்லுபடியற்ற கடவுச்சீட்டுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வந்ததாகக் கூறி குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில்,பாராளுமன்ற உறுப்பினர் சமர்ப்பித்த கடவுச்சீட்டு போலியானதல்ல அல்லது  என குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சாட்சியங்களை சமர்ப்பித்து நீதிமன்றில் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதனையடுத்து அவர் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.