பூஜாபிட்டிய கஹவத்த பிரதேசத்தில் வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாரம் வெட்டி தூண்களை அமைத்துக் கொண்டிருந்த இருவர் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பூஜாபிட்டிய திவானவத்த பகுதியைச் சேர்ந்த ஜகத் விஜேசூரிய என்ற 54 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
பிரதேசவாசிகள் இருவரையும் மீட்டு அக்குறணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆபத்தான நிலையில் இருந்த மற்றைய நபர் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.