வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

77 0

கம்பஹா ரயில் நிலையத்துக்கு  அருகில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட  துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட  சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கியுடன் T – 56 வகை துப்பாக்க்கிக்குப் பயன்படுத்தப்படும் 10 தோட்டாக்களுடன் , 2.2 மில்லி மீற்றர் 7 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உந்துகொட, ருக்கஹவில பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடையவராவார்.

இது தொடர்பில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆலோசனையின் கீழ் மேலதிக நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.