நுவரெலியாவில் உணவகத்தில் தீ பரவல்

80 0

நுவரெலியா நகரில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கிருந்த பொது மக்கள், பொலிஸார் மற்றும் நுவரெலியா நகரசபை தீயணைப்புப் பிரிவு இணைந்து முயற்சித்ததில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வழக்கம் போல உணவகத்தில் சமையல்  வேலைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது சமையலறையில் இருந்த புகை மற்றும் வெப்பத்தை அகற்றும் மின் விசிறியில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.