ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்

87 0

ஜனாதிபதி தேர்தலுக்காக   ஏற்கனவே 1,000 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடத்தின் இரண்டாம் பாதியில் நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கு ஆணைக்குழு தயாராகி வருவதாகவும் அதன் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க   தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த வருட இறுதிக்குள் கட்டாயம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலுக்கான எழுது கருவி பொருட்களைக் கொள்வனவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.