அரியானாவில் பரபரப்பான சாலையின் நடுவே வாலிபர் ஒருவர் காளை மீது சவாரி செய்த வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அதில், சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போது வாலிபர் ஒருவர் காளை மீது அமர்ந்து சவாரி செய்வதை காண முடிகிறது.
இதை சாலையில் செல்லும் பயணிகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். சிலர் செல்போனில் வீடியோ எடுக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்து வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த வாலிபரின் செயலை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
விலங்குகளை கொடுமை படுத்தும் இது போன்ற செயல்களை செய்யக்கூடாது என சிலர் பதிவிட்டனர். இதே போல அந்த வாலிபர் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் பலரும் ஆவேசமாக பதிவிட்டு வருகின்றனர்.