அரச பேருந்து எரிபொருள் கொள்கலனுடன் மோதி விபத்து

90 0

மட்டக்களப்பு – குருநாகல் வீதியில் அரச பேருந்து ஒன்று எரிபொருள் கொள்கலனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஏராவூர் டிப்போவுக்கு சொந்தமான பேருந்தே இன்று (30.03.2024) இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.மேலும் விபத்தில் பேருந்து பகுதி அளவில் சேதமடைந்துள்ளதுடன் பேருந்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.