யுக்திய நிறைவு குறித்து பொலிஸ்மா அதிபர் கருத்து

48 0

நாட்டிலிருந்து பாதாள உலகமும் போதைப்பொருள் கடத்தலும் ஒழிக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் உணரும் போதே யுக்திய நடவடிக்கை முடிவுக்கு வரும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று (29) கருத்துத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர், யுக்திய நடவடிக்கைகளை பாதியில் நிறுத்தினால், மீண்டும் பழைய நிலையே ஏற்படக்கூடும் எனவும், அதனை சரியான புரிதலுடன் கையாள்வதாகவும் தெரிவித்தார்.

பாதாள உலகத்துடன் தொடர்பில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.