கிளிநொச்சி ஆயுர்வேத வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு

55 0

கிளிநொச்சியில் ஆயுர்வேத வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது என பொது மக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிய வருவதாவது,

ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு செல்லும் நோயாளிகளுக்கு மருந்துகளை வெளியில் பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பொருளாதார நெருக்கடிக்காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் மருந்துகளை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் , கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக 50 வீதமான மருந்துக்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என சம்மந்தப்பட்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொழும்பிலிருந்து தங்களுக்கு உரிய மருந்து கிடைக்கப்பெறவில்லை. இதன் காரணமாக மாதாந்தம் தங்களிடம் சிகிச்சைக்காக வருகின்ற பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். என குறிப்பிட்டுள்ளனர்.