திட்டமிட்ட குற்றச் செயல்களை செய்யும் கும்பலைச் சேர்ந்த மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களுடன் பல்வேறு தொடர்புகளை வைத்து குற்றச் செயல்களுக்கு ஆதரவளித்ததாக சந்தேகிக்கப்படும் 5 பேர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கடந்த 19 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட கைது செய்யும் நடவடிக்கைகளில் 186 ஆண் மற்றும் பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.