இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டமாம்!

94 0

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் முறையிலிருந்து விலகி, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு  அந்தப் பணிகளை ஒப்படைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக     குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் முறையினால் அதன் முழு வருமானமும் நேரடியாக குடிவரவு திணைக்களத்துக்குக் கிடைத்துள்ளதாகவும், இந்தப்  பணியை ஒப்படைப்பதன் மூலம் பெரும் வருமானத்தை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.