மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் இருந்து T-56 ரக துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் பிரதான வாயில் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன துப்பாக்கியை மீட்பதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.