மட்டக்களப்பு வாழைச்சேனை, புனானையில் குளம் ஒன்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் தான் பயன்படுத்திய வலையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில், வாழைச்சேனை பொலிஸாரிடம் உயிரிழந்தவரின் தந்தை நேற்று திங்கட்கிழமை (25) முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் புனானை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடையவராவார்.
உயிரிழந்தவர் சுகவீனம் காரணமாக வேலையின்றி வீட்டில் இருந்ததாகவும் இந்நிலையில் நேற்று குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர் பயன்படுத்திய மீன்பிடிவலையில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.