வத்தளை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது

58 0

வத்தளை பிரதேசத்தில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட போது போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது  05 கிராம் 400 மில்லி கிராம் ஹெரொயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் ஹெந்தல பிரதேசத்தைச் சேர்ந்த  44 வயதுடையவராவார்.

இந்த சம்பவம் தொடர்பாக வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.