ஐயாயிரம் ரூபா மற்றும் ஆயிரம் ரூபா போலி நோட்டுக்களுடன் இளம் தம்பதியினர் குட்டிகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அநுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் குட்டிகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ஐயாயிரம் ரூபா போலி நோட்டுக்கள் 5 மற்றும் ஆயிரம் ரூபா போலி நோட்டுக்கள் 5 கைப்பற்றப்பட்டுள்ளன.