இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், அண்மையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அரசியல் அமைச்சரவைக்கு இது அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.