சிறந்த மற்றும் நம்பகத்தன்மையான அரசியல் கலாசாரத்தை தோற்றுவிப்பதற்கு அரசியல் கட்சிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்கள் தீர்மானமிக்கவை. எவ்வாறானவர்களுக்கு வேட்புமனுக்கல் வழங்க வேண்டும் என்பதை அரசியல் கட்சிகளுக்கும், எவ்வாறானவர்களை பிரதிநிதிகளாக தெரிவு செய்ய வேண்டும் என்பதை நாட்டு மக்களுக்கும் தெளிவுப்படுத்தும் நிகழ்வு விகாரமாதேவி பூங்காவில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் நாட்டு மக்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என மார்ச் 12 அமைப்பு அழைப்பு விடுக்கிறது.
மார்ச் 12 அமைப்பின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (28) கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் விசேட கருத்தாடல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.இந்நிகழ்வு தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (26) இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. இதன்போது பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி,ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா – நிறைவேற்று பணிப்பாளர் நதிஷானி பெரேரா, மார்ச் 12 அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.
அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெளிவுப்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் வியாழக்கிழமை (26) காலை 10 மணிமுதல் இரவு 08 மணிவரை கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்படவுள்ளன.தேர்தல்கள் ஆணைக்குழு,இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு,இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பல்கலைக்கழக கட்டமைப்பினர்,சிவில் அமைப்பினர் உட்பட 25 மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகள்,பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களில் மக்கள் சிறந்த தரப்பினரை தெரிவு செய்ய வேண்டும்.சிறந்த தரப்பினரை மக்கள் தெரிவு செய்ய அரசியல் கட்சிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.அரசியல் கட்சிகள் எவ்வாறானவர்களுக்கு வேட்பு மனுக்கள் வழங்க வேண்டும் என்பது குறித்து அரசியல் கட்சிகளுக்கு காலை வேளையில் தெளிவுப்படுத்தப்படும்.
ஊழலற்ற,சிறந்த அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்க சிறந்த தரப்பினரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.ஆகவே சிறந்த தரப்பினரை எவ்வாறு தெரிவு செய்ய வேண்டும் என்பது குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும்.அதன் பின்னர் மாலை 06 மணிமுதல் இரவு 08 மணிவரையான காலப்பகுதியில் விகாரமாதேவி பூங்காவில் இடம்பெறும் இசை நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்துக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்படுகிறது.