குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை மீளாக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானம்

63 0

குடும்ப வன்முறைச்செயல் தடுப்புச் சட்டத்தை மீளாக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் 2005ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க குடும்ப வன்முறைச்செயல் தடுப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும், குறித்த திருத்தங்கள் மூலம் சட்டத்தின் பிரிவுகள் அதிகளவில் திருத்தப்படவுள்ளமையால், பொது மக்களுக்கு இலகுவாகப் புரிந்து கொள்வதற்காக தற்போது வலுவாக்கத்திலுள்ள சட்டத்தை இரத்துச் செய்து, ஏற்புடைய அனைத்துத் திருத்தங்களையும் உட்சேர்த்து இச்சட்டத்தின் தற்போதைய பெயரின் கீழ் புதிய சட்டமொன்றை உருவாக்குவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் புதிய சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதி  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.