ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவர்களுக்கு மட்டும் மதிய உணவு வழங்குவது அரசாங்கத்திற்கு வெட்கமாக இல்லையா?

59 0

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் பாடசாலை மாணவர்களை பலப்படுத்துவதற்காக சீருடை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்ட போதிலும் தற்போது ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவர்களுக்கு மட்டும் மதிய உணவு வழங்க அரசாங்கம்  ஏற்பாடு செய்துள்ளது. இது வெட்கக்கேடான கொள்கை. ஒரே பாடசாலையில் பயிலும் மாணவர்களை பிரித்து வகைப்படுத்தக் கூடாது.ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அவ்வாறான வகைப்படுத்தலை மேற்கொள்ளாமல் சகல மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 134 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் ஹம்பந்தோட்டை,தங்கல்ல கொடவாய மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மார்ச் 25 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கல்லூரியின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான ஆடைகளை பெறுவதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நமது நாட்டு பிள்ளைகள் வேலை பார்க்க வேண்டும் என்பது எமது கனவு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இந்நாட்டு பிள்ளைகள் வேலை பார்க்க வேண்டும் என்பது தமது கனவாகும். சாப்ட்வேயர் இன்ஜினியர்களின் சொர்க்க பூமியாக எமது தேசத்தை மாற்ற வேண்டும் என்ற கனவு நமக்கும் இருக்கிறது.

இதற்கு ஆங்கில அறிவும் தகவல் தொழிநுட்ப கணினி அறிவும் தேவை. சிங்களம் மட்டும் தமிழ் மட்டும் என்ற எல்லைகளுக்குள் சுருங்கிக் கொள்வதால் இந்த கனவை அடைய முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் நியமிக்கப்பட்ட ஆட்சியாளர்கள் காலத்திற்கு ஏற்ற சரியான கல்வி முறையை வழங்காமை சிறுவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.