வெடுக்குநாறியில் கைதானவர்கள் ஐ.நா அலுவலகத்தில் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியை நேரில் சந்தித்தனர்.

126 0

வெடுக்குநாறியில் கைதான எட்டுப்பேரில் 6 பேர் கொழும்பிலுள்ள ஐநா அலுவலகத்தில் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியை நேரில் சந்தித்து சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேசுவரர் ஆலயத்தில் நடந்த பூசை வழிபாட்டின் போது பொலீசார் மேற்கொண்ட அடக்குமுறைகள், துன்புறுத்தல்கள் மற்றும் கைதுகள் அத்தோடு அடிப்படை வசதிகளற்ற சிறையில் அடைத்து வைக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசு திட்டமிட்ட வழிபாட்டு மறுப்பு மற்றும் அடக்குமுறையில் ஈடுபட்டுவரும் நிலையில் பொலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும்.எதிர்காலத்தில் இடையூறுகள் இன்றி ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான சூழல் உறுதிப்படுத்தப்படல் வேண்டுமெனவும் கோரி மகஜர் ஒன்றுபாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இன்று கையளிக்கப்பட்டது.

தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்டுவரும் பெளத்த சிங்கள மயமாக்கலினையும் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளையும் தடுத்து நிறுத்தும் நோக்கோடு அனைத்துலக ரீதியான முறைப்பாடாக இது செய்யப்பட்டுள்ளது.