பொடிமெனிக்கே ரயிலில் பயணித்த ரஷ்ய யுவதியின் தலைப்பகுதி குகையில் உராய்ந்ததில் காயம்!

55 0

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்த பொடிமெனிக்கே ரயிலில் பயணித்த யுவதி ஒருவரின் தலைப் பகுதி குகை ஒன்றில் உராய்ந்ததில்   காயமடைந்து தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (26) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ரஷ்யாவை சேர்ந்த யுவதியே காயமடைந்துள்ளார்.

இவர் ரயிலின் மிதிபலகையில் அமர்ந்தவாறு காட்சிகளை கண்டுகளித்துக் கொண்டிருந்த போதே இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த ரஷ்ய யுவதியை எல்ல ரயில் நிலையத்துக்கு கொண்டு சென்று அங்கிருந்து அம்பியூலன்ஸ் மூலம் வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.