களுத்துறையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் – பொலிஸார் மோதல்!

50 0

களுத்துறை நகரின் மையப் பகுதியில் மக்கள் இயக்கத்தின் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே இன்று (26) மோதல் நிலைமை ஏற்பட்டது.

வாழ்க்கைச் செலவு உயர்வு, வரி அதிகரிப்பு,மின்சாரக் கட்டண உயர்வு பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தம் சட்டம் , போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தல் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து  மக்கள் போராட்ட இயக்கத்தினர் பிரதான பஸ் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

காலை முதல் களுத்துறை நகர் மற்றும் களுத்துறை நகர் அண்டிய பிரதேசங்களிலும் பொலிஸாரின் விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததோடு போராட்டம் மேற்கொண்ட பகுதியிலும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

 

இதன்போது இரு தரப்பினரிடையே இவ்வாறான மோதல் நிலைமை தோன்றியிருந்தது.