சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது!

41 0

காசல்ரீ நீர்த்தேக்க பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நோர்வுட் , கண்டி , கிருலப்பனை மற்றும் எஹலியகொடை உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்த 28, 43, 47 ,60 வயதுடையவர்களாவர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.