காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் இருவர் கைது

130 0

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து இரும்பு திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் இன்று செவ்வாய்க்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் , ஒரு தொகை இரும்பு கம்பிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் வாகனம் ஒன்றில் அத்துமீறி நுழைந்து இருவர் இரும்பு திருட்டில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்  , அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் திருட்டில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களையும் , அவர்களது வாகனத்தையும், அவர்களால் திருடப்பட்ட ஒரு தொகை இரும்பு கம்பிகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.