வடபகுதி விவசாயிகளின் மின் கட்டணத்தை குறைப்பதற்கான அமைச்சரவை பத்திரம்

41 0

வடபகுதி விவசாயிகளின் மின்கட்டணத்தை குறைப்பதற்கான  அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர்  விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாயம் தொடர்பில் வடபகுதி  விவசாயிகள் காண்பிக்கும்  அர்ப்பணிப்பை கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சிற்கு ஒதுக்கப்படும் நிதியி;ல் அதிகளவான நிதியை வடக்குகிழக்கு அபிவிருத்தி திட்டங்களிற்கு ஒதுக்குமாறு ஜனாதிபதி  ஆலோசனை வழங்கியுள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

30 வருடகால யுத்தத்தினால் வடபகுதி மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தனர் ஆனால் இந்த நெருக்கடிகளின் மத்தியிலும் அவர்கள் விவசாயத்தை கைவிடவில்லை எனதெரிவித்துள்ள அமைச்சர் மகிந்தவீர வடபகுதி விவசாயிகள் மின்கட்டண நிவாரணங்களை கோரியுள்ளனர் என தெரிவித்துள்ள அமைச்சர் இதனடிப்படையில் அவர்களின் மின்கட்டணங்களை குறைப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.