கடவத்தை எல்தெனிய ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அலுவலகம் மீது கை்குண்டுத் தாக்குதல்!

44 0

கடவத்தை எல்தெனியவிலுள்ள  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அலுவலகம் மீது செவ்வாய்க்கிழமை (26) கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக  சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டே வீசப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கல் காரணமாக இந்த கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என  பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, கட்சி அலுவலகத்துக்கு  முன்பாக உள்ள வீதியில் ஒரு கைக்குண்டும் கட்சி அலுவலகத்துக்குள்  மற்றொரு கைக்குண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.