யாழ்.மீசாலை ஏ-9 வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

61 0

யாழ்ப்பாணம் மீசாலை  ஏ-9 வீதியில்  சொகுசு பஸ்  வீதியில் சென்றவேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதில்  மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணையை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.