ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் எங்கே? சஜித் கேள்வி!

58 0

இன்று மீண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பலரும் பேசுகின்றனர். இந்த விடயத்தில், ஆங்காங்கே வெவ்வேறு கதைகளைச் சொல்வதை விடுத்து, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வெளிப்படையான மற்றும் துல்லியமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு பொதுவான ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு பதிலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களை ஈடுபடுத்துவது உகந்தது. வெளிப்படையான மற்றும் நேர்மையான விசாரணையை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி அவர்கள் கூட ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரை அழைத்து விசாரணைகளை நடத்துவதாக கூறினாலும், இதுவரையில் அதை நாடவே இல்லை. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடுவதில் அவருக்கு விருப்பமில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தொடர்பான விசாரணைகளை மறைத்து வருவதிலும் ஈடுபாடு காட்டாமையும் பலத்த சிக்கலையும் கேள்விகளையும் எழுப்பி நிற்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் துயரம் காரணமாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எந்தவொரு நபரையும் பாதுகாக்க வேண்டிய தேவை ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லாததால் நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணையை நாம் மேற்கொள்வோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமாக்கப்பட்ட தேவாலயங்களை புனரமைப்பதில் முக்கிய பங்காற்றியவன் என்ற வகையில், இந்த வெறுக்கத்தக்க பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுக் கொடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 133 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் ஹம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை, கிவுல கனிஷ்ட வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (25) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், ​​கல்லூரியின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான ஆடைகளை பெறுவதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணங்களை ஏன் மேற்கொள்ளவில்லை என பலரும் கேட்கின்றனர். அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்வதை விட நாட்டில் உள்ள 10126 பாடசாலைகளுக்குச் சென்று அவர்களின் குறைபாடுகளை ஆராய்ந்து இந்நாட்டில் அரச கல்வியைப் பெறும் 41 இலட்சம் மாணவர்களுக்கு இயன்ற பக்க பலத்தை வழங்கி, இந்தக் குறைபாடுகளை தீர்த்து ஸ்மார்ட் பாடசாலைகளாக மாற்றுவதே தனக்கு முக்கியான விடயமாக அமைவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.