பிணைப் பத்திர மறுசீரமைப்பு குறித்து வௌியான தகவல்!

39 0

சர்வதேச பிணைப் பத்திரங்களின் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடி காரணமாக, 2022 ஆம் ஆண்டு முதல் கடனை செலுத்த இலங்கை அரசு தவறியிருந்தது.

12 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பத்திரங்கள் மறுசீரமைக்க முன்மொழியப்பட்டதாக ப்ளூம்பெர்க் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடத்தில் நடைபெறவுள்ள நிலையில், கூடிய விரைவில் இணக்கப்பாட்டுக்கு வருவதே இரு தரப்பினரதும் நோக்கமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.