நிர்ணய விலையினால் சந்தையில் தரக்குறைவான பொருட்கள்

385 0

Tamil_News_large_157087120160724232432அத்தியாவசிய பொருட்களுக்கான நிர்ணய விலைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சந்தையில் பல தரங்குறைந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கு ற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
நெத்தலி, பருப்பு, கடலை ஆகியவற்றிட்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்துள்ளது.
எனினும் சில அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி விலையானது நிர்ணய விலையிலும் பார்க்க அதிகமாக காணப்படுகின்றது.
இதன் காரணத்தினால் தரங்குறைந்த பொருட்களை சந்தையில் விநியோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.