இலங்கையில் நாளாந்தம் 3 பெண்கள் மார்பகப் புற்றுநோயினால் உயிரிழக்கின்றனர்

44 0

இலங்கையில் வருடாந்தம் 1,095 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் இறப்பதாகவும் 5,475 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் டாக்டர் லங்கா ஜயசூரிய திஸாநாயக்க கூறுகிறார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கண்டியில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இந்திரா ஜயசூரிய புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் லங்கா ஜயசூரிய திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு 8 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த மார்பகப் புற்றுநோயால் எமது நாட்டில் தினமும் மூன்று பெண்கள் உயிரிழக்கின்றனர் என்றும் கூறினார்.