குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வியாழக்கிழமை (07) மாலை கோட்டை நீதவான் திலின கமகே விஜயம் செய்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடுசலிந்து மற்றும் ஹரக்கட்டா உள்ளிட்ட சந்தேக நபர்களை அவதானித்துள்ளார்.
சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் இவர்களை வெளியே அழைத்துச் செல்லும்போது நீதிமன்றத்துக்கு அறிவிக்குமாறும் அதன்போது சட்ட உதவிகளை வழங்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர்களுக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
தான் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹரக்கட்டா நீதிவானிடம் தெரிவித்தபோது அது தொடர்பான சிகிச்சைகளை வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.